/tamil-ie/media/media_files/uploads/2019/06/z1019.jpg)
minister sp velumani filed case against dmk chief mk stalin - தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு
தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 3ம்தேதி திமுக தலைமையகமான அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் தமிழக அரசை விமர்சித்து பேசியது தொடர்பாக செப்டம்பர் 4 ம் தேதி முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
'பத்திரிக்கையாளர்' என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்
அதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் நகர குற்றவியல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
10ம் வகுப்பு பாடத்தில் ஆர்எஸ்எஸ் குறித்த தவறான வாசகம் நீக்கப்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.