Advertisment

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது முறைகேடு வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான சென்னை மாநகராட்சி முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி முடிவுவெடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SP Velumani, minister sp velumani, malpractice case on sp velumani, எஸ்பி வேலுமணி, லஞ்ச ஒழிப்புத்துறை, எஸ்பி வேலுமணி மீது முறைகேடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், high court order to anti corruption department

SP Velumani, minister sp velumani, malpractice case on sp velumani, எஸ்பி வேலுமணி, லஞ்ச ஒழிப்புத்துறை, எஸ்பி வேலுமணி மீது முறைகேடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம், high court order to anti corruption department

அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான சென்னை மாநகராட்சி முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி முடிவுவெடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.

இதில் ஒப்பந்தபடி மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்துவதாக கூறி எம்-சாண்ட் மணல் பயன்படுத்தியதாகவும், தார் சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்படும் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது உள்ளிட்ட முறைகேடுகளில் 600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அதில், ஒரு அலுவலகத்தின் ஐ.பி முகவரியை பயன்படுத்தி பல ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருப்பதாகவும், இதில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீலிடபட்ட கவரில் தாக்கல் செய்தனர். மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொள்ளும் விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தின் அனுதியில்லாமல் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இறுதி முடிவு எடுக்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Minister Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment