பெரம்பலூரில் குன்னம் தொகுதியில் உள்ள சில கிராமங்களில் நீர் தேங்கி இருப்பதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
Advertisment
களநிலவரத்தை பார்வையிட வந்த அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் வடிகால் வசதி இல்லை. மழை பெய்தால் நீர் தேங்குகிறது என்று குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர்.
உடனடியாக அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்த அமைச்சர், கழிவு நீர் குழாய் ஏற்படுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
விஏஓவிடம் பேசிய அமைச்சர், இந்த இடத்தில் குழி வெட்டுங்க. பெருசா குழி வெட்ட வேண்டாம். தண்ணீர் செல்லும் அளவிற்கு குழி வெட்டினால் போதும். கம்ப்ளீட்டா நீங்க இருந்து வெட்டி கொடுங்க. நீங்க மேற்பார்வை செய்யுங்கள். நான் சொல்றேன், நாளைக்கு ஒருநாள் நீதான் எம்எல்ஏ. பத்திரமா இருந்து பண்ணுங்க என கூறியது, அங்கிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
அப்போது திமுக நிர்வாகிகள் நாங்கள் கவனிச்சிக்கிறோம் என்பது போல் அமைச்சரிடம் கூறினார்கள். அதை கேட்ட அமைச்சர், ஊர் பொறுப்பை கட்சியினரிடம் கொடுத்தால் எதிர்கட்சிகள் சண்டைக்கு வரலாம். விஏஓ அனைவருக்கும் பொதுவானவர். எல்லாருக்காகவும் வேலை பார்ப்பார் என தெரிவித்தார்.
அதோடு இல்லாமல், தனது சொந்த செலவில் ஜேசிபியை அனுப்பி வைப்பதாகவும், குழி வெட்டி வடிகால் ஏற்படுத்தி நீரை வெளியேற வழிசெய்யுங்கள் என கூறினார்.
கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சுற்றியிருந்த சமயத்தில், விஏஓ-விடம் நீதான் ஒருநாள் எம்எல்ஏ என அமைச்சர் கூறியது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil