கடந்த சில நாட்களாக சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அதனால் அங்கு மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக கடுமையான காய்ச்சல் பரவி வருவதால் மீண்டும் ஒரு பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் அனைவருக்கும் உருவாகியுள்ளது.
சீனாவில் பரவி வரும் புதிய வைரஸுக்கு ஹெச்.எம்.பி.வி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரஸ், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், இதனால் தினந்தோறும் ஏராளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.எம்.பி.வி வைரஸை அவசர நிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த வைரஸ் சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளிலும் பரவும் ஆபத்து இருப்பதால், அனைத்து நாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து," சீனாவில் இருந்து பரவும் வைரஸ் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“