chennai-rain | thangam-thennarasu | மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு ரூ.450 கோடியை முதல்கட்டமாக வழங்கியது. தொடர்ந்து, மழை நீரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ரூ.6 ஆயிரம் பெற டோக்கன்கள் ரேஷன் கடைகளில் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இந்தப் பணிகள் 10 நாள்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக ரூ.6,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, டோக்கன் வழங்கப்படும் பணிகள் 10 நாள்களில் நிறைவடையும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“