தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, நிதி மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வுக்கால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது எனத் தெரிவித்தார்.
முன்னதாக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், “பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது என்றார். இந்த நிலையில் தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதனை கூறியுள்ளார்.
மேலும் மெட்ரோ திட்டம் குறித்து பேசிய தங்கம் தென்னரசு, “சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.12ஆயிரம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“