Advertisment

4 மாவட்டங்களில் கனமழை, சரிந்து விழுந்த மின்கம்பங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் 79 உயரழுத்த மின் கம்பங்கள், 61 தாழ்வழுத்த மின் கம்பங்கள், 2 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

rain | tirunelveli | thangam-thennarasu | தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது.
மேற்கண்ட மாவட்டங்களில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Advertisment

இன்று (18.12.2023) காலை 10 மணி நிலவரப்படி, மேற்கண்ட மாவட்டங்களில் அதி கனமழை இருப்பினும், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், பெரும்பான்மையான இடங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு கோபுரங்கள்  ஆகியவற்றிற்கு முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வரை  திருநெல்வேலி மாவட்டத்தில் 79 உயரழுத்த மின் கம்பங்கள், 61 தாழ்வழுத்த மின் கம்பங்கள், 2 மின் மாற்றிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில்  20 உயரழுத்த மின் கம்பங்கள், 9 தாழ்வழுத்த மின் கம்பங்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு உயரழுத்த மின் கம்பம், 4 தாழ்வழுத்த மின் கம்பங்கள் மற்றும்  தென்காசி மாவட்டத்தில் 2 தாழ்வழுத்த மின் கம்பங்கள் ஆகியவை  சேதமடைந்துள்ளன.
மேற்கண்ட மாவட்டங்களின் பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளில்  5,000 பேர் தற்போது களத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 2,78,557 மின்கம்பங்கள், 10,400 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 19,466 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளன. மேலும் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tirunelveli Thangam Thennarasu rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment