சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் ஏன் அமைக்கப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (அக்.19) சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது பாமக தலைவர் ஜிகே மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பேசினார்.
வளர்ச்சிக்கு பாமக முட்டுக்கட்டை அல்ல
அப்போது, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பேசிய பாமக தலைவர் ஜிகே மணி, “நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு என்ன செய்யப் போகிறது. அங்குள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது” எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பேசிய வேல்முருகனும் இதே கருத்தை முன்வைத்தார். விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தொடர்ந்து சக உறுப்பினர்களின் கேள்விக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “சென்னை விமான நிலையத்தில் 2.2 கோடி பேர் பயணிகள் கையாளப்படுகின்றனர்.
இது, 2028 ஆம் ஆண்டில் 3.5 கோடியாக அதிரிக்கும். மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சென்னை விமான நிலையம் பயணிகளைக் கையாள்வதில் மூன்றாவது இடத்திலிருந்தது 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து இடம் மற்றும் சூழலை கருத்தில் கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் விமான நிலையத்தை விரிவாக்க இடம் இல்லாததால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil