scorecardresearch

தி.மு.க தேர்தல் வாக்குறுதி: பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? புதிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

தி.மு.க தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வருமா என்ற கேள்விக்கு புதிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

Minister Thangam Thennarasu response on the old pension scheme
அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. தொடர்ந்து, 2004ஆம் ஆண்டுக்கு பிறகு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், திமுக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தங்கம் தென்னரசு, “பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவு எடுக்கும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister thangam thennarasu response on the old pension scheme