தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக புதிய தலைமுறை, நியூஸ்-18 ஆகிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களும் செய்தி வெளியிட்டதாக, சபாநாயகர் தனபாலிடம் உரிமை மீறல் புகார் அளித்தார் அமைச்சர் தங்கமணி.
லைகா நிறுவனப் படங்களை கேரளாவில் எதிர்க்கும் விநியோகஸ்தர்கள்: காரணம் இது தான்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது, தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் மூலம் மட்டும் வரக்கூடிய வருவாய் அதிகரித்து வருகிறது. இது நல்லது அல்ல. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் மது விலக்கு எப்போது அமல் படுத்தப்படும் என திமுக எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, மது குடிப்பது அதிகரிப்பதே டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புக்கு காரணம். மக்கள் குடிக்கிறார்கள் அதற்கு என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது. செய்தி தொலைக்காட்சி சேனல்களும் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில், தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக புதிய தலைமுறை, நியூஸ்-18 ஆகிய இரண்டு தொலைக்காட்சி சேனல்களும் செய்தி வெளியிட்டுள்ளன. மக்களை திசைதிருப்பும் வகையில் செய்தி வெளியிட்டு அந்த இரண்டு சேனல்களும் அவை உரிமையை மீறியிருக்கின்றன. எனவே அந்த இரு தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.
மோடியைப்போல் பிரச்சாரம் செய்து தேர்தலில் வென்றாரா கெஜ்ரிவால்?
இதையடுத்து, அமைச்சர் எழுப்பிய பிரச்சினையில் உரிமை மீறல் இருப்பதாக தெரிவதால் இந்த புகாரை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.