scorecardresearch

3 முறை எம்.எல்.ஏ, முனைவர் பட்டம்… புதிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா முழு பின்னணி

3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற டி.ஆர்.பி ராஜா. திமுக தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக உள்ளார். 1976ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி பிறந்த இவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் படித்தார்

3 முறை எம்.எல்.ஏ, முனைவர் பட்டம்
3 முறை எம்.எல்.ஏ, முனைவர் பட்டம்

இன்று புதிய அமைச்சராக பதவியேற்கும் டி.ஆர்.பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி செய்யத் தொடங்கியது முதல் இதுவரை 2 முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அமைச்சரை நீக்குவது இதுவே முதல் முறை. ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழக அரசு பரிந்துரைப்படி  பால் வலத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, டி.ஆர்.பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி.ஆர்.பி ராஜா இன்று பதவியேற்கும் நிலையில், அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொழில் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு, நிதியமைச்சகம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை வழங்கப்படுவதுடன், மனோ தங்கராஜுக்கு பால்வளதுறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிய அமைச்சராக பொருபேற்கும் டி.ஆர்.பி ராஜா, திமுக பொருளாளர் மற்றும் நாடாளுமன்றக் குழு தலைவருமான டீ.ஆர் பாலுவின் மகன். 3 முறை மன்னார்குடி தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற டி.ஆர்.பி ராஜா. திமுக தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக உள்ளார். 1976ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி பிறந்த இவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி பள்ளியில் படித்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளநிலை கல்வியும், சென்னை பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றுள்ள அவர், வேல்ஸ் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

2021ம் முதல், தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர், தமிழ்நாடு பொதுகணக்குக் குழு தலைவர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 2021- 22 வரை திமுக வெளிநாடு வாழ் இந்திய அணியின் மாநில செயலாளராகவும். 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தஞ்சவூர் தமிழ் பல்கலைகழத்தின் செனெட் உறுப்பினராக இருந்து உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister trb raja full profile dmk minister

Best of Express