மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்துக்கு அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றது. இதுவரை நடந்த வன்முறைகளில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் முன்னாள் தலைவர் காரில் சென்றார்.
Advertisment
அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில், “மணிப்பூரில் தற்போது அமைதியை நிலைநாட்டுவதுதான் கடைமையாக இருத்தல் வேண்டும்.
I strongly condemn the Manipur police for stopping brother Thiru @RahulGandhi on his way to violence-torn Manipur. While the Prime Minister remains mute on the critical issue, Rahul Gandhi is attempting to lend ears to the people of Manipur. Restoring peace there should be the…
இந்த விவகாரத்தில் பிரதமர் மௌனமாக இருக்கிறார். அதனால் ராகுல் காந்தி குறைகளை கேட்கிறார். ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதுக்கு கடும் கண்டனங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“