/tamil-ie/media/media_files/uploads/2023/04/Udhayanithi-Stalin.jpg)
உதயநிதி ஸ்டாலின்
தமிழகத்தில் மத்திய ரிசர்வ் காவல் படைக்கான நுழைவுத் தேர்வில் தமிழ் மொழியை சேர்க்கக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய ரிசர்வ் காவல் படைக்கான கணினி தேர்வில், தமிழ் மொழியை சேர்க்கக்கோரி சென்னையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17ஆம் தேதி) திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மாணவர் பிரிவு செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பணிக்கான தேர்வுகள் இந்தி&ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வரும் 17-ம் தேதி, சென்னையில் மொழி உரிமை காக்கும் படையாக திரள இளைஞர்-மாணவர் அணியினரை அழைக்கிறோம்", என்று குறிப்பிட்டுள்ளனர்.
#CRPF பணிக்கான தேர்வுகள் இந்தி&ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்தி பேசாத மக்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வரும் 17-ம் தேதி, சென்னையில் மொழி உரிமை காக்கும் படையாக திரள இளைஞர்-மாணவர் அணியினரை அழைக்கிறோம். pic.twitter.com/UcpFOLAGKd
— Udhay (@Udhaystalin) April 14, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.