/tamil-ie/media/media_files/uploads/2022/12/Express-Image-7.jpg)
Source: Twitter/ @Udhaystalin
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சங்கரய்யாவை மற்றும் நல்லகண்ணு ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களாக தற்போது திகழும் சங்கரய்யாவையும், நல்லகண்ணுவையும் மரியாதை நிமித்தமாக அமைச்சர் உதயநிதி சந்தித்து பேசியிருக்கிறார்.
இருவருக்குமே பொன்னாடைகள் அணிவித்து சந்தித்த அவர், அவர்களது ஆசியும் பெற்றிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரய்யாவை சந்திக்கச் செல்லும் தகவலை தெரிந்துகொண்டதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சங்கரய்யா வீட்டுக்கு வருகை தந்திருந்தார். சங்கரய்யாவிடம் அமைச்சர் உதயநிதியை அறிமுகம் செய்து வைத்து, அவரது செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.
மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
போராட்ட வாழ்வையே பொதுவாழ்வாக கொண்ட தோழர், கொண்ட கொள்கையிலிருந்து விலகாத பொதுவுடைமை சிந்தனையாளர், சுதந்திரபோராட்ட வீரர் அய்யா சங்கரய்யா அவர்களை, இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து அவரது குரோம்பேட்டை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்றேன். pic.twitter.com/q9VzI9X7Vh
— Udhay (@Udhaystalin) December 20, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.