தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகள் மற்றும் நினைவிடங்களில் க்யூ.ஆர் குறியீடுகளை நிறுவும் முயற்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
Advertisment
இந்த திட்டத்தின் முதல் க்யூ.ஆர் குறியீடு சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையில் நிறுவப்பட்டது.
நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளின் 360 டிகிரி புகைப்படங்களை www.tndipr.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியும் தொடங்கப்பட்டது.
தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் பராமரிக்கப்படும் அனைத்து சிலைகள் மற்றும் நினைவிடங்களிலும் QR குறியீடுகள் நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளுக்குச் செல்பவர்கள் அவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற QR குறியீடுகளை ஸ்கேன் செய்துகொள்ளலாம்.
Advertisment
Advertisements
.@TNDIPRNEWS பராமரிப்பிலுள்ள தலைவர்களின் நினைவகங்கள் & சிலைகளின் 360° கோண புகைப்படங்கள் - அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை காணொலி & ஒலிக்குறிப்பு வடிவில் QR Code மூலம் பார்க்கின்ற வசதியை முதற்கட்டமாக சென்னை காமராஜர் சாலை திருவள்ளுவர் சிலை அருகே இன்று தொடங்கி வைத்தோம். நமக்காக உழைத்த… pic.twitter.com/Y5JGJS994S
முன்னதாக நினைவு சிலைகள் மற்றும் சின்னங்களுக்கு அருகே, அதைப்பற்றிய தகவல்கள் கல் பலகைகளில் பதிக்கப்பட்டிருக்கும்.
ஆனால், தற்போது க்யூ.ஆர் குறியீடுகள் வைப்பதால், இடத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், தகவல் தெரிந்துகொள்ள நினைக்கும் மக்களின் கைக்கு அடக்கமாக கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
க்யூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம், 360 டிகிரி நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளைக் காட்டும் புகைப்படங்களையும் அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
க்யூ.ஆர் குறியீடுகளை நிறுவுதல் மற்றும் 360 டிகிரி புகைப்படங்களை பதிவேற்றும் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil