ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் குழு ஒடிசா புறப்படுகின்றனர். தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக்கும், ஒடிசா விரைகின்றார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர்கள் ஒடிசாவிற்கு பயணம் செய்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்.
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil