2023ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி ஆரம்பதித்ததில் இருந்து, பல்வேறு தகவல்கள் மக்களையும் தலைவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதில் முக்கியமானது தமிழக ஆளுநரின் உரை மற்றும் அவரது வெளிநடப்பு ஆகும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தை தெரிந்துகொண்ட அதிமுகவினர் ஆளுநருக்கு முன்பே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று நடைபெற்ற சம்பவத்தை பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது,
"தலைவர் எழுந்து தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்தார். அப்போது அனைவரும் தமிழக ஆளுநர் எப்போது சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வார் என்பதையே கவனித்திருப்பீர்கள்.
ஆனால், ஆளுநருக்கு முன்னதாகவே இரண்டு பேருடைய பெரிய கும்பல் வெளிநடப்பு செய்ததை யாரும் கவனிக்கவில்லை.
ஆளுநருக்கு தமிழ் தெரியாது. ஆனால் இவர்கள் இருவருக்கும் தமிழ் தெரியும் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநரை எதிர்த்து தீர்மானம் கொண்டுவருகிறார்கள் என்று தெரிந்ததுமே, உடனே கிளம்பிவிட்டார்கள். இவர்கள் வெளிநடப்பு செய்த பிறகே, ஆளுநருக்கு புரிந்திருக்கும்.
மக்களுக்கு பிரச்சனை என்றால், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைக் காட்டுவது மரபு.
அலங்கோலமான எதிர்க்கட்சி, அதை பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது தமிழ்நாட்டில் நுழையலாம் என்று நினைக்கின்ற இன்னொரு கட்சி. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, எந்த காலத்திலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil