scorecardresearch

‘கொஞ்சம் பார்த்து போடுங்க’: அஸ்வின் பந்துவீச்சில் மட்டையை சுழற்றிய உதயநிதி

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 42 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் டீமிற்கு ஸ்போர்ட்ஸ் கிட் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

express news

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிக்கும் வண்ணம், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிக்கூடத்தினை தமிழக அரசு துவக்கி வைத்திருக்கிறது.

இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இன்று நம்முடைய இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் அஷ்வின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று ஐபிஎல் மேட்ச் உள்ளது. ஆனால், அஷ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவில்லை. ராஜஸ்தானுக்காக விளையாடுகிறார். அவர் விக்கெட் எடுத்தாலும் நாம் கைதட்டுவோம். ஏனென்றால் அவர் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்.

அஸ்வினிடம் எப்பொழுது வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பீர்கள் எனக் கேட்டேன். என்னால் எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் வந்து பயிற்சி அளிப்பதாக சொல்லியுள்ளார். ‘

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 42 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் டீமிற்கு ஸ்போர்ட்ஸ் கிட் வழங்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Minister udhayanithi stalin inaugurates cricket coaching centres for tn students