கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலை பாறைக்கும் இடையே கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியது.
அதன்படி பட்ஜெட்டில் ரூ.37 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ வேலு இன்று தொடங்கிவைத்தார்.
அப்போது, “இந்தப் பாலம் அமைக்கும் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் என்றார். தொடர்ந்து, திருவள்ளுவர், தாமிரபரணி என்ற இரண்டு படகுகள் இயக்கத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
இந்தப் படகுகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு வகையிலான கட்டணங்கள் வசுலிக்கப்படுகின்றன. அதன்படி, சாதாரண கட்டணமாக ரூ.300.00, குளிரூட்டப்பட்ட பகுதிக்கு ரூ.450.00 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கன்னியாகுமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம், அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் தங்க ராஜ், மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே, அதிமுக ஆட்சியின் நிறைவு காலத்தில் ரூ 8.25 கோடி வாங்கப்பட்ட படகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“