Advertisment

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க மறுப்பு!

எனக்கு எதிராக பேசி வரும் அறப்போர் இயக்கம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu latest news live, Minister Velumani

Tamil Nadu news today in tamil,

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Advertisment

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அவர்களின் நிறுவனங்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்கக் கோரி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தொடர்ந்து தனக்கு எதிராக பேசி வரும் அறப்போர் இயக்கம் ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நேரத்தில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் என வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடப்பட்டது.

இதேபோல தங்களுக்கு எதிராக தடை கோரி ஒப்பந்ததாரர் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மார்ச் 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கத்துக்கு உத்தரவிட்டு, ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்த வழக்குகளுடன் சேர்த்து அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

Chennai High Court Minister Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment