Advertisment

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு: 2 வாரத்திற்கு தள்ளி வைப்பு!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
news in tamil,

news in tamil, : அமைச்சர் வேலுமணி பேட்டி!

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரில் சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமைச்சர் வேலுமணி வழக்கு:

இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுப்படியே அவர் கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு 86 லட்சம் ரூபாயாக இருந்த ஒரு நிறுவனத்தின் வரவு செலவு, எஸ்பி.வேலுமணியின் தயவால் 28 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதேபோல 17 கோடியாக இருந்த மற்றொரு நிறுவனத்தின் வரவு செலவு தற்போது 498 கோடி ரூபாயாக பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமைச்சரின் பினாமிகள் நடத்தும் பல நிறுவனங்களின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

இவர் அமைச்சரான பிறகு சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இருந்து வைப்பீடுகள் மற்றும் இருப்பு நிதி பன்மடங்கு குறைந்துள்ளது 942 கோடி ரூபாய் அளவுக்கு உபரி வருவாயைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தவறான நிர்வாகத்தால் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேபோல கோவை மாநகராட்சியின் வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோதமாக பணம் எடுக்கப்பட்டு அதன் இருப்பு நிலையும் மோசமாகியுள்ளது.

அமைச்சரின் பினாமியாக செயல்பட்டவரின் பொறுப்பில் தற்போது நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி போன்ற நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள், பொதுப்பணித்துறை, மெட்ரோ ரயில், ஸ்மார்ட் சிட்டி என பல்வேறு ஒப்பந்தங்கள் அமைச்சரின் உறவினர்களுக்கும், பினாமிகளுக்குமே வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கிடைத்த கோடிக்கணக்கான பணத்தின் மூலமாக அமைச்சரின் உறவினர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைக்கடைகளையும், ஹோட்டல்களையும் நடத்தி வருகின்றனர்.

Dmk Minister S P Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment