ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு – வைரலாகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ

Minister Viajayabaskar : ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

By: Updated: December 30, 2019, 07:51:47 PM

ஒரு உயிரைக் காப்பாற்றிய நிறைவு உயிருக்குப் போராடுபவர்களை படம் பிடிக்கும் நாகரீகத்தை விட்டொழித்து ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவுடையார் கோவில் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கி, சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு, ஓடிச்சென்று அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்து, துரிதமாக முதலுதவி செய்தார். பின்னர், தன்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் அவரை ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல், அறந்தாங்கி தலைமை மருத்துவரைத் தொடர்பு கொண்ட அமைச்சர், விபத்தில் சிக்கிய நபருக்கு உடனடி சிகிச்சையும் அதனைத் தொடர்ந்து சிறப்பான சிகிச்சையும் அளிக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு

அமைச்சரின் இந்த மனித நேய செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது நெட்டிசன்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister vijayabaskar live saving completion viral video minister vijayabaskar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X