முதல்வர் பெயரை இப்போது அதிகம் உச்சரிக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஊடகங்களை சந்தித்து பேசிவருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த இரண்டு நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்பைவிட அதிக முறை மாண்புமிகு முதலமைச்சர் என்று உச்சரிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By: Updated: April 19, 2020, 02:14:29 PM

தமிழக அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து தினமும் ஊடகங்களிடம் தெரிவித்துவந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஊடகங்களை சந்தித்து பேசிவருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த இரண்டு நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்பைவிட அதிக முறை மாண்புமிகு முதலமைச்சர் என்று உச்சரிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கடந்த மார்ச் 7-ம் தேதி கண்டறியப்பட்ட நாள் முதலே தமிழக அரசு கொரோனா வைரஸை எதிர்கொண்டு அதன் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை, பரிசோதனை நடவடிக்கை, அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், சிறப்பு கொரோனா வார்டுகளை அமைத்தல் என அரசின் அனைத்து பணிகளையும் ஊடகங்களிடம் தெரிவித்து வந்தார்.

திடீரென சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா நிலவரங்கள் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்தார். சில நாட்களில், சுகாதாரத்துறை செயாளர் பீலா ராஜேஷ் உடன் தலைமை செயலாளர் சண்முகம் அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையும் நிலவரங்களையும் ஊடகங்களிடம் கூறினார்.

இதனிடையே, முதல்வர் பழனிசாமியும் இரண்டு மூன்று நாட்கள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், கொரோனா நிவாரணங்கள் குறித்தும் ஊடகங்களிடம் பேசினார்.

இதனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன் தினம் மீண்டும் ஊடகங்களின் முன்பு தோன்றி தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தினசரி நிலவரங்களைக் கூறினார். கொரோனா வைரஸ் நிலவரங்களைத் தமிழக அரசு சார்பில் ஊடகங்களில் தெரிவிப்பதற்கான இந்த செயல்பாடு அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசு பொருளானது.

இந்த நிலையில், சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர், ஆரம்பத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஊடகங்களிடம் பேசியபோது முதல்வர் பழனிசாமியை குறிப்பிட்டதைவிட கடந்த 2 நாட்களாக முதல்வர் பழனிசாமியை அதிக முறை குறிப்பிட்டு பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மட்டும் முதலமைச்சரை 20 முறை குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கரின் பழைய செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோவையும் கடந்த 2 நாட்களில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மார்ச் 16-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ

அமைச்சர் விஜயபாஸ்கர் மார்ச் 31-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோ

நெட்டிசன்கள் சொல்வதைவிட வாசகர்கள் இந்த வீடியோக்களைப் பார்த்து சரிபார்த்துக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister vijayabaskar often uttering cm edappadi k palaniswami name in press meet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X