/tamil-ie/media/media_files/uploads/2021/12/ma-su-covid-safety.jpg)
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விழுப்புரம் நகரப் பேருந்தில் பயணிகளிடம் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் கொரோனா தடுப்பூசி போட்டீர்களா என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ப் பேசுகிறார். ஆனால், அப்போது அமைச்சர் முகக்கவசம் இல்லாமல் இருந்ததால் நெட்டிசன்கள் பலரும் மிஸ்டர் அமைச்சர் முகக் கவசம் எங்கே கேட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தில் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடம், கோவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடியுங்கள் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முகக் கவசம் அணியாமல் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக சாதாரண மக்கள் முதல் குழந்தைகளும் கூட கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் மாவட்டத்தில், பொது இடங்களில் முகமூடி அணியாமல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 13வது மெகா கோவிட்-19 தடுப்பூசி முகாமை மேற்பார்வையிட விழுப்புரம் மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்தார். அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழுப்புரத்தில் ஆய்வு செய்யும்போது பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், முகக்கவசம் அணியாமல் இருக்கிற அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை முகக்கவசம் அணியுமாறும், அவர்கள் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என்றும் கேட்கிறார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, முகக் கவசம் அணியாமல் மா. சுப்ரமணியன் நடைப்பயணத்தில் ஈடுபட்டார். நகரப் பேருந்தைக் கண்டதும், அவர் அதில் ஏறிய அவர், 2 தவனை கொரோனா தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டீர்களா என்று பயணிகளிடம் கேட்பது அந்த வீடியோவில் தெரிகிறது.
அப்போது ஒரு பயணி, தான் முதல் தவனை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் இரண்டாவது தவனை போட்டுக்கொள்ள மறந்துவிட்டதாகவும் கூறினார். அதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரண்டாவது தவனையை தவறாமல் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். “நீங்கள் எங்கே தடுப்பூசி போட்டுக்கொண்டீர்கள்? மருத்துவமனையிலா இல்லை முகாம்களிலா” என்று அமைச்சர் சில பயணிகளிடம் கேட்டார். மேலும், அவர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி பிரச்சாரம் செய்தபோது, சுகாதார அதிகாரிகள் தங்கள் வீடுகளில் தடுப்பூசி போட்டதாக ஒரு தம்பதியினர் கூறியபோது அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இந்த மாதிரி சுகாதாரத் துறை அமைச்சர் எல்லாம் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் @Subramanian_ma ❤
— நிதன் சிற்றரசு (@srinileaks) December 4, 2021
pic.twitter.com/3EfoEAZ3B0
சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமனியன் பேருந்தில் ஏறி, மிகவும் எளிமையாக பயனிகளிடம் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா என்று கேட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தியதை நெட்டிசன்கள் பலரும் பாரட்டி வருகின்றனர்.
@Subramanian_ma where is your mask? @mkstalin @ptrmadurai https://t.co/16th3fbIVb
— Sanal Sudevan (@SanalSudev) December 4, 2021
அதே நேரத்தில், அமைச்சர் மா. சுப்பிரமண்யன் விழுப்புரம் நகரப் பேருந்தில் ஏறி பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி பேசும்போது, அவர் முகக் கவசம் அணியாமல் இருக்கிற வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், விழிப்புணர்வு அறிவுரை சொல்வதெல்லாம் இருக்கட்டும், மிஸ்டர் அமைச்சர் உங்களுடைய முகக் கவசம் எங்கே என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு பரிசோதனையில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களின் தொற்றுகளின் மொத்த எண்ணிக்கையை நான்காகக் கொண்டு சென்றது. நான்கு நோயாளிகளிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளதா என்பதைச் சரிபார்க்க சோதனைக்கு அனுப்பப்பட்டது. ஓரிரு நாளில் முடிவு தெரியவரும்” என்று கூறினார்.
மேலும், அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “இங்கிலாந்தில் தினமும் சராசரியாக 45,000 பேருக்கு கோவிட்-19 தொற்று (டெல்டா மாறுபாடு) உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து சனிக்கிழமை காலை சென்னைக்கு வந்த இளைஞர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் தரையிறங்க வாய்ப்பில்லை. இங்கு ஒமிக்ரான் மாறுபாட்டுடன் இதுவரை, அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த 4 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பெங்களூரு ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.