இன்று முதல் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஆரம்பம்: மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வாழ்த்து!

சென்னை லேடி வெலிங்டன் பள்ளிக்கு இன்று காலை நேரில் சென்ற அவர், பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை குறித்து ஆய்வு நடத்தினார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் ஆரம்பமாகி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.

இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  சென்னை லேடி வெலிங்டன் பள்ளிக்கு இன்று காலை நேரில் சென்ற அவர்,  பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை குறித்து ஆய்வு நடத்தினார். அதன் பின்பு, பள்ளியில் இருந்த ப்ளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தேர்வர்கள்  தேர்வு வளாகத்திற்குள்   செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: என்றும் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் எழுத எழுதுகின்றனர். பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 278 புதிய தேர்வு மையங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

45 ஆயிரத்து 380 ஆசிரியர்கள் தேர்வின் போது அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடவும், தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ் வழியில் மட்டும், 5 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேர் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வுகள் குறித்த புகார்களை தெரிவிக்க தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள்  தேர்வு வளாகத்திற்குள்   செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை மீறோவோர் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில்  மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறத்தப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி நிர்வாகம் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 103 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் இந்த ஆண்டுக்கான ப்ள்ஸ் 2 தேர்வினை எழுதுவது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister wishes to all plus two students

Next Story
வேத மந்திரங்கள் ஒலிக்க சங்கர மடத்துக்குள் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com