Advertisment

கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், இல்லை எனில்...; தி.மு.க.,வுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாற்று முடிவை எடுப்போம்; ஆளும் தி.மு.க.,வுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மறைமுக எச்சரிக்கை

author-image
WebDesk
New Update
ie tamil

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாற்று முடிவை எடுப்போம்; ஆளும் தி.மு.க.,வுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மறைமுக எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது மாற்று நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிறுபான்மையினரால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், தமிழக அரசின் பணி நியமன ஒப்புதலுக்காகவும், ஊதியத்திற்காகவும் காலவரையின்றி காத்திருக்கின்றனர் என்று கூறி, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழு திருச்சியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 28) ஒரு மாநாட்டை நடத்துகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க ஆளும் தி.மு.க.,வின் தேர்தல் கூட்டணி கட்சி தலைவர்கள் சம்மதம் தெரிவித்தாலும், சிறுபான்மையினர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் அமைப்பாளர் ஜான் கென்னடி, குழுச் செயலர் டி.கனகராஜ் ஆகியோர் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீடு, ‘புதுமைப் பெண்திட்டத்தின் கீழ் ரூ.1,000 மாதாந்திர உதவித் தொகை மற்றும் இலவச ஆங்கில வழிக் கல்வி ஆகியவற்றை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

இறப்பு, ஓய்வு, விருப்ப ஓய்வு, பதவி உயர்வு போன்றவற்றால் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்கி, பணி நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து சம்பளம் வழங்க வேண்டும். மறைந்த முதல்வர் மு.கருணாநிதி 2011ல் பிறப்பித்த அரசாணையின்படி, 1991-க்குப் பிறகு தொடங்கப்பட்ட அனைத்து தமிழ்வழிப் பள்ளிகளுக்கும் ஒப்புதல் அளித்து, தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2018ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் சிறுபான்மை பள்ளிகளின் உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் மாநில அரசு திரும்பப் பெற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் பலமுறை அளித்தும் தமிழக அரசு எந்த ஒரு சாதகமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், செப்டம்பர் 28-ம் தேதி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் எங்களது உரிமைகளை மீட்க மாநாட்டை நடத்துகிறோம்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் 5,000 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர். எங்களின் உண்மையான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் (அரசியல்) முடிவை எடுப்போம்,” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment