தமிழகத்தில் மே 1-ஆம் தேதி முதல் மினி பேருந்துகளின் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, முதல் 2 கிலோமீட்டருக்கும், 2 கிலோமீட்டர் முதல் 4 கிலோமீட்டர் வரை பயணத்திற்கும் ரூ. 4 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையான 6 கிலோமீட்டர் வரை பயணத்திற்கு ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, நான்காம் நிலை பயணமான 8 கிலோமீட்டருக்கு ரூ. 6 கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நிலை பயணமான 10 கிலோமீட்டர் வரை ரூ. 7 மற்றும் ஆறாம் நிலை பயணமான 12 கிலோமீட்டர் வரை ரூ. 8 வசூலிக்கப்படவுள்ளது.
இது தவிர, ஏழாம் நிலையான 14 கிலோமீட்டர் முதல் ஒன்பதாம் நிலையான 18 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ. 9 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, பத்தாம் நிலையான 20 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் அனைத்தும் மே மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.