மீரா மிதுன் மீது புகார் கூறிய மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் கைது!

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்த மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

By: Updated: December 30, 2019, 07:52:45 PM

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்த மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

காங்கிரஸ் தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டியும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த புகாரில் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரை இழிவாக பேசுவதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு இரண்டு முறை சம்மன் கொடுத்தும் அவர் ஒருமுறை கூட காவல் நிலையத்துக்கு சென்று விளக்கம் அளிக்கவில்லை.

இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார், ஜோ மைக்கேல் பிரவீனை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தபோது அவர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கல் பிரவீனை கைது சிறைக்கு அனுப்பினர்.

மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவந்த ஜோ மைக்கேல் பிரவீன் நடிகையும் மிஸ் தமிழ்நாடு அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Miss tamilnaddu event organizer joe michael praveen arrested

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X