முன்னாள் நீதிபதி வீட்டில் மாயமான வழக்கு ஆவணங்கள்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

100க்கும் மேற்பட்ட   முக்கியமான வழக்குகளின்  ஆவணங்கள்  தற்போது மாயமாகியுள்ளன.

By: Updated: July 19, 2018, 10:15:09 AM

முன்னாள் நீதிபதி வீட்டுக்கு  கொண்டு செல்லப்பட்ட முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து   சென்னை உயர் நீதிமன்றம் சிபிஜ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து கடந்தாண்டு  ஓய்வு பெற்றவர்  முன்னாள் நீதிபதி  டி.மதிவாணன்.  இவர் நீதிபதியாக இருந்த காலக்கட்டத்தில் இவர் விசாரித்த  100க்கும் மேற்பட்ட   முக்கியமான வழக்குகளின்  ஆவணங்கள்  தற்போது மாயமாகியுள்ளன.

குறிப்பாக  நீதிபதியின் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட  வழக்கு ஆவணங்கள் , திரும்ப  நீதிமன்றத்திற்கு  வந்து சேராமல்  இருந்துள்ளன.  இதுக் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் மற்றும்  நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதி  இந்திரா பானர்ஜியிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து,  இதனை உடனடியாக விசாரிக்கும் படி  நீதிபதி, உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டார்.   இந்த விசாரணையில்  வழக்குகள்  ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியின் வீட்டிற்கு சென்ற பின்பு மாயமானது உறுதி செய்யப்பட்டது.  நீதிபதியின்  செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  தலைமை நீதிபது, உடனடியாக மாயமான வழக்குகளின் ஆவணங்களை இரு தரப்பினரிடம் இருந்தும் திரும்ப பெற்று அதை, மறு கட்டமைப்பு செய்யும்படி   உயர்நீதிமன்ற பதிவுத் துறைக்கு  ஆணை பிற்பித்தார்.

இந்நிலையில், மாயமான  ஆவணங்களின் வழக்குகள்  நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மற்றொரு அதிர்ச்சி  தகவலும் கண்டுப்பிடிக்கப்பட்டது. மாயமான ஆவணங்களில் சிபிஐ விசாரித்த வழக்குகளின் ஆவணங்களும் அடங்கும்.   மாயமான 100க்கும் மேற்பட்ட வழக்குகளின் ஆவணங்களில் சிபிஐ  விசாரித்த  வழக்குகளின்  ஆவணங்களும் சேர்ந்து காணமல் போயியுள்ளது. இதுக் குறித்து உடனடியாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

அதன் பின்பு,  மாயமான வழக்கு ஆவணங்கள் குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு   தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  சிபிஐ க்கு உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Missing files madras hc orders cbi probe

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X