பினாமி மாவட்ட செயலாளர்கள் – மு.க.அழகிரி பாய்ச்சல்

படிப்படியாக வளர்ந்தவர் எல்ராஜ். கலைஞர் அனைவரையும் அப்படித்தான் வைத்திருந்தார்.

TN Live Updates : mk Alagiri

தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள் பினாமி போல் செயல்படுவதாக, கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட முன்னாள் தி.மு.க துணை செயலாளர், எம்.எல்ராஜின் இல்ல திருமண விழாவில் மு.க.அழகிரி கலந்துக் கொண்டார். எல்ராஜின் மகள் லிபியா-சந்தோஷ் குமார் ஆகியோரது திருமணம் அது.

திருப்பரங்குன்றத்தில் நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில், அழகிரியின் மனைவி மற்றும் மகனும் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய அழகிரி, ”படிப்படியாக வளர்ந்தவர் எல்ராஜ். கலைஞர் அனைவரையும் அப்படித்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது தி.மு.க-வில் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்கும் பினாமிகளாக உள்ளனர்.

வெளியில் உள்ளவர்கள் தான் அவர்களை கட்டுப்படுத்துகிறார்கள்” என்று விமர்சித்தார்.

Web Title: Mk alagiri criticize dmk district secretaries

Next Story
9 முறை வானத்தைப் பார்த்து சுட்ட தேர்தல் அதிகாரி… அரியலூரில் பரபரப்பு…IPS Officer Hemant Kalson relieved
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com