பாஜகவில் மு.க அழகிரி? சிபிஆர் சொல்லும் சீக்ரெட்

பாஜகவில் மு.க.அழகிரி இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மக்கள் ஆசி யாத்திரை பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரையை கடந்த 16ஆம் தேதி கோவையில் தொடங்கினார். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

இதனிடையே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றிய சிபி ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது. அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள். நாம் ஒரு நாளை உருவாக்க போகிறோம். விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பா.ஜ.க-வில் இணைகின்ற நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk alagiri in bjp cp radhakrishnan speech

Next Story
சார்பட்டாவில் ஸ்டாலின் பற்றிய வசனத்தை நீக்குங்கள்; இயக்குனர் பா. இரஞ்சித்துக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ்AIADMK Advocate issued notice to Pa Ranjith, AIADMK Advocate Babu Murugavel, Babu Murugavel wants to remove about MK Stalin dialogue, Sarpatta Parambarai, சார்பட்டாவில் ஸ்டாலின் பற்றிய வசனத்தை நீக்குங்கள், இயக்குனர் பா. இரஞ்சித்துக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ், அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல், Sarpatta Parambarai controversy, aiadmk, dmk, mk stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express