ஸ்டாலின் மட்டும் அல்ல நானும்தான் கருணாநிதியின் மகன்; கொந்தளித்த மு.க.அழகிரி

நடிகர் ரஜினி தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவார் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மு.க.ஸ்டாலின் மட்டும் கருணாநிதியின் மகன் அல்ல நானும் அவருடைய மகன்தான் என்று கொந்தளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

By: January 30, 2020, 9:47:01 PM

நடிகர் ரஜினி தமிழகத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவார் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மு.க.ஸ்டாலின் மட்டும் கருணாநிதியின் மகன் அல்ல நானும் அவருடைய மகன்தான் என்று கொந்தளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பிறகு, அவ்வப்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையேயான பூசல் தொடர்ந்து நிலவி வருகிறது.

இந்த நிலையில், மு.க.அழகி சமீபத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறினார். இது திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், திமுகவுக்கு அதிர்ச்சி அளிப்பதில் மு.க.அழகிரிக்கு அப்படி என்ன ஆனந்தம் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

அண்மையில், மு.க.அழகிரியின் 70வது பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிஅருகின்றனர். மு.க.அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் மதுரையில் ஓட்டிய போஸ்டரில் மு.க.அழகிரியுடன் ரஜினியின் படமும் இடம்பெற்றிருந்தது. அதுமட்டுமல்லாமல், ஒரு போஸ்டரில், “கழகத்தைக் காக்க வா… தமிழகத்தை மீட்க வா… தலைவா!” என்ற வாசகத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.

அழகிரியின் தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் திமுகவில் இருந்து நீக்கிய பிறகு அவருக்கு பெரிய அளவில் ஆர்வம் இல்லை. இந்த நிலையில்தான் அவருடைய 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர் ஒருவரின் விழாவுக்கு சென்ற அழகிரி, ஸ்டாலினை தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் மட்டும் கலைஞருக்கு மகன் அல்ல நானும்தான் கலைஞரின் மகன் ஸ்டாலின் மீது மறைமுகமாக கொந்தளித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அதிமுகவினர்கூட தன்னைப் பார்த்தால் நெருங்கி வந்து பேசி நலம் விசாரிக்கிறார்கள். ஆனால், திமுகவினரோ தன்னைப் பார்த்தால் முகத்தை திருப்பிக்கொண்டு பதறி ஓடுகிறார்கள் என்று கவலை தெரிவித்துள்ள அழகிரி இந்த நிலை எப்போது மாறும் என்று தனக்கு தெரியும் என்று பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மு.க.அழகிரியின் இந்தப் பேச்சு திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மு.க.அழகிரி ரஜினியுடன் ஏற்கெனவே கூட்டுவைத்திருப்பதாக கருதும் திமுகவினர் அவர் வேறு ஏதோ திட்டம் வைத்துள்ளார் என்று ஐயப்படுகின்றனர்.

அதே நேரத்தில், மதுரையில் மு.க.அழகிரிக்கு இருக்கும் செல்வாக்குக்கு என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று அவரது ஆதரவாளர்களும் அவருக்கு உற்சாகம் அளிப்பதாக கூறுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk alagiri son of karunanidhi speaks not only stalin am also kalaignars son

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X