mk alagiris supporter meets amit shah : திமுக முன்னாள் எம்பியும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான கே.பி.ராமலிங்கம் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் முருகன் முன்னிலையில், அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அவர், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வியூகம் ஆகியவற்றை குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது.
இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின.ஆனால் அவர் அதனை மறுத்தார். இந்நிலையில் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் அமித்ஷாவை இன்று மாலை சந்தித்து பேச உள்ளார்.கே.பி.ராமலிங்கம் இந்த சந்திப்பின் பிறகு அதிகாரப்பூர்வமாக பாஜக வில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. மேலும், டெல்லியில், ஜே.பி நட்டா முன்னிலையில் கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் கே.பி ராமலிங்கம் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். உறுப்பினர் கார்டும் அப்போதே வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக பொறுப்பாளர் சிடி ரவி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக,வ்தமிழக பொறுப்பாளர் சிடி ரவியை கேபி ராமலிங்கம் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மேடை பேச்சாள் நரசிம்மனும் உடன் இருக்கிறார்.நரசிம்மன் மற்றும் ராமலிங்கம் இருவரும் கொங்கு பகுதியை சார்ந்தவர்கள். இருவரும், தங்கள் பகுதிகளில் இருந்து திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களை பாஜகவில் இணைய அழைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி ராமலிங்கம் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் இந்நிலையில், இன்று மாலை அமித்ஷாவை சந்திப்பார் என தெரிகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”