அட... பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது - டென்சன் ஆன மு.க.அழகிரி

திமுகவும் பாஜகவும் தூத்துக்குடியில் நேரடியாக போட்டியிடுகின்றது.

MK Azhagiri H raja Controversial Photo : திமுக – காங்கிரஸ் – மதிமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி – ஆகிய கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்து இம்முறை தேர்தலில் போட்டியிட, தேர்தல் களம் சூடாகியுள்ளது. திமுகவும் பாஜகவும் தூத்துக்குடியில் நேரடியாக போட்டியிடுகின்றது. இதில் ஹைலைட் என்னவென்றால், முக அழகிரியின் சகோதரி மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான கனிமொழி கருணாநிதி திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

MK Azhagiri H raja Controversial Photo

இவரை எதிர்த்து பாஜக தரப்பில், தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகின்றார். இவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகின்ற நிலையில், மு.க.அழகிரிக்கு, பாஜக தலைவர் எச்.ராஜா பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மறைமுகமாக பாஜகவிற்கு அழகிரி ஆதரவு அளிக்கின்றாரா என்று அனைத்து தரப்பில் இருந்தும்  கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் அந்த தேவையற்ற வீண் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மு.க.அழகிரி.

மத்திய இணை அமைச்சராக இருந்த போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க : எல். கே சுதீஷ் கணக்கு ஜெயிக்குமா? விஜபி-களின் தொகுதியான கள்ளக்குறிச்சி!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close