scorecardresearch

எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவேன் : மு.க. அழகிரி பேட்டி

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க. அழகிரி, எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் தெரிவித்துள்ளார். மு.க. அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு : திருவாரூரில் நடைபெறவிருக்கும் கலைஞர் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க. அழகிரி பேசவிருக்கிறார். முன்னதாக திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ‘ திருவாரூர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவேன். தனியாக கட்சி துவங்கி போட்டியிடும் எண்ணமில்லை. அப்படி நான் போட்டியிட்டால் அனைத்துக் கட்சியினரும் […]

MK Azhagiri, DMK, Congress, Election 2019, மு.க.அழகிரி, கருணாநிதி மகன்
திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க. அழகிரி, எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் தெரிவித்துள்ளார்.

மு.க. அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பு :

திருவாரூரில் நடைபெறவிருக்கும் கலைஞர் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க. அழகிரி பேசவிருக்கிறார். முன்னதாக திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ‘ திருவாரூர் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவேன். தனியாக கட்சி துவங்கி போட்டியிடும் எண்ணமில்லை. அப்படி நான் போட்டியிட்டால் அனைத்துக் கட்சியினரும் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு’ என்று கூறியுள்ளார்.

‘மெரினாவில் அமைதிப் பேரணி நடத்தியது கலைஞரின் நினைவுக்காக நடத்தப்பட்டது, எனது பலத்தை நிரூபிக்கவோ, தனிக்கட்சி தொடங்கவோ இல்லை. என்னை பாஜக இயக்குவதாகக் கூறுவது வதந்தி. தலைவர் கலைஞரின் கொள்கைகளை என்றும் நான் பின்பற்றுவேன். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரு கட்சிகளுமே போராட்டம் மட்டுமே நடத்தி வருகிறது’ என்று மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk azhagiri press meet about election in thiruvarur