மு.க. அழகிரி அமைதிப் பேரணி : மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி இன்று அமைதி பேரணி நடத்த உள்ளார்.
கலைஞரின் நினைவிடம் நோக்கி செல்ல இருக்கும் இந்த பேரணியில் அழகிரியின் ஆதரவாளார்கள் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த அமைதி பேரணி நடத்துவதற்காக மதுரையில் இருந்து நேற்று முன்தினம் (03/09/2018) சென்னை வந்தார் அழகிரி. அமைதி பேரணிக்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டு இன்று காலை சரியாக 10 மணிக்கு இந்த பேரணி துவங்க உள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக வந்த அழகிரியை நேரில் சந்தித்துப் பேசிய வேளச்சேரி திமுக செயலர் ரவியை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார் மு.க. ஸ்டாலின். அது தொடர்பான செய்தியைப் படிக்க
மு.க. அழகிரி அமைதிப் பேரணி live updates
2:20 PM: அழகிரி பேரணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கருத்து கேட்டபோது, ‘நோ கமெண்ட்ஸ்’ என ஒதுங்கிக் கொண்டார்.
2:00 PM:: கருணாநிதி மரணம் அடைந்து 30-ம் நாளான இன்று அஞ்சலி செலுத்தவே பேரணி நடத்தியதாகவும், வேறு காரணம் இல்லை என்றும் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறினார். பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறிய அழகிரி, ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாக மட்டுமே தனக்கு மோதல் என்றார்.
12. 40 pm: தந்தையின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார் மு.க. அழகிரி
12.20 pm: மெரினாவை நெருங்கினார்கள் முக அழகிரி, அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய தொண்டர்கள்.
11:35 am: அமைதிப் பேரணியில் அழகிரியின் மகன் தயா அழகிரி, மகள் கயல்விழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
11:20 am: மு.க.அழகிரி அமைதிப் பேரணி தொடங்கியது. ஆதரவாளர்களுடன் நடந்து சென்றார் அழகிரி. அழகிரியும், ஊர்வலத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் பலரும் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர்.
10;40 am; மெரினாவை நோக்கி அலைகடலென தொண்டர்கள் திரண்டதாக மு.க.அழகிரியின் மகன் தயா அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டார்.
10:00 am : மு.க.அழகிரி பேரணியை ‘ஐஇ தமிழ்’ முகநூல் பக்கத்திலும் ‘லைவ்’வாக பார்க்கலாம்.
10.10am : கலைஞர் இறந்து முப்பது நாட்கள் முடிவடைந்த நிலையில் கலைஞரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த செய்யப்பட்ட ஏற்பாடே இது. தொண்டர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க நடத்தப்படும் பேரணி ஆகும் என்று அழகிரி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பிரத்யேகப் பேட்டி.
9.51 am : காலை 10 மணியளவில் இந்த அமைதி பேரணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
9.42 am : திருவல்லிக்கேனியில் இருந்து தொடங்க இருக்கும் பேரணிக்காக தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று மு.க. அழகிரி மகன் தயா அழகிரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
9.37 am : அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேனி பகுதியில், தொண்டர்கள் மேளத் தாளத்துடன் பேரணியை தொடங்க தயாராக உள்ளனர். /tamil-ie/media/media_files/uploads/2018/09/M.K.-Azhagiri-peace-march-1024x512.jpg)
9.34 am : அண்ணா சாலை பகுதியில் அழகிரி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
அண்ணா சாலையில் தொண்டர்கள்
9.32 am : பேரணி நடக்கும் பகுதிகளான வாலாஜா சாலை, கடற்கரை சாலை, கருணாநிதி நினைவிடம் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
9.30 am : ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.