அமைச்சா் செந்தில் பாலாஜி கடுமையான குற்றத்தை எதிர்கொண்டுள்ளார். வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியது, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் அவா் மீது உள்ளன.
Advertisment
மேலும், அவா் அமைச்சா் பதவியை துஷ்பிரயோகம் செய்து, இந்த வழக்கு விசாரணையில் தனது செல்வாக்கைச் செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார். தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வரும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
அவா் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் சில குற்ற வழக்குகள் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பாதிக்கும், இது மாநிலத்தில் அரசியலமைப்பு நடைமுறையைச் சீா்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன.
இப்படி மேற்சொன்ன காரணங்களை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநா் ஆா்.என் ரவி செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளர்
Advertisment
Advertisement
இத்தகைய முடிவு குறித்து முதல்வா் ஸ்டாலினுக்கும் ஆளுநா் தகவல் அனுப்பினார்.
இந்த நிலையில், ஆளுநர் ரவி வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதை விமர்சித்து அரசியல் செயல்பாட்டாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஆனால் கடந்த ஏப்ரல் 13, 2017-ல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது அது தொடர்பாக அப்போதைய தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவிடம் இதே மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் துரைமுருகன், உள்ளிட்ட திமுகவினர் மும்பை சென்று முறையிட்டனர்.
அந்த மனுவில், “முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல பல உதாரணங்கள் உள்ளன’ என கே.எஸ். ராதாகிருஷ்ணன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“