திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை திமுக தொண்டர்கள் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
ஓவ்வொரு வருடமும் ஸ்டாலினின் பிறந்தநாள், திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் வெகும் விமர்சியாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த வருடமும் ஸ்டாலின் 65 ஆவது பிறந்தநாளை தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
முதலில் ஆழ்வார் பேட்டையில் ஆவரது வீட்டில் ஸ்டாலின் தனது மனைவியுடன் கேக் வெட்டினார். அதன் பின்பு, கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் தந்தை கருணாநிதி மற்றும் தாய் தயாளு அம்மாளை சந்தித்த ஆசி பெற்றார். அங்கிருந்து நேராக பெரியார் நினைவிடம், மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்.
கலைஞர் அரங்கம் சென்ற ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டினார். அவரை வாழ்த்த ம் ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர். ப்ல்வேறு வகைகள் தொண்டர்கள் ஸ்டாலினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுப.வீரபாண்டியன் போன்ற பலர் ஸ்டாலினுக்கு பிறந்தநால் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மேலும், ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ட்விட்டர் பக்கத்தில் #HBDMKSTALIN , #HBDMKStalin66 போன்ற ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டில் இடம் பிடித்துள்ளன.