DMK Chief M.K. Stalin Hospitalized in Apollo Hospital Due to Minor Surgery: மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவரது தொடைப் பகுதியில் உள்ள கட்டிக்காக சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை விடுத்திருக்கிறது. பிற்பகலில் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உடல்நல பரிசோதனைகளை அவ்வப்போது தவறாமல் செய்வது வழக்கம்! நேற்று (செப்டம்பர் 26) இரவு திடீரென சென்னை, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் சாதாரணமான உடல்நலப் பரிசோதனைக்காக அவர் சென்றதாக கூறப்பட்டது.
M.K. Stalin Undergoes Minor Surgery in Apollo Hospital: அப்பல்லோவில் மு.க.ஸ்டாலின்- சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அறிக்கை
வழக்கமாக அப்பல்லோவி அவர் உடல் பரிசோதனை செய்வதில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மு.க.ஸ்டாலின் லண்டனுக்கு சென்று வருவதுண்டு. தவிர, திடீரென இரவில் அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வருடம், ஜூலை மாதம் இடது கண்ணில் ஏற்பட்ட கண்புரை பாதிப்பின் காரணமாக கண்புரை அறுவைச் சிகிச்சையை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிகிச்சையை அவர், ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் மேற்கொண்டார்.
இந்நிலையில், அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று காலையில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு வலதுபக்க கால் தொடையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக’ அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மு.க ஸ்டாலின் பிற்பகல் வீடு திரும்புவார் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற்பகலில் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.