'ஒட்டுமொத்தமாக ரூ.3, 233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பயணத்தை முடித்து தமிழகம் திரும்பிய ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: ” பயணம் வெற்றிகரமாக அமைந்தது. பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவு பெறக்கூடிய வகையில் பயணம் அமைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட, மிகப் பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒக்கனெக்கல் கூட்டு குடிநீர் திட்டம் போன்றவை இன்று செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதில் ஜப்பான் நாட்டின் பங்கும் இருப்பதால்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி துரையில் உலகிற்கே முன்னோடியாக விளங்குகிறது ஜப்பான். அதேநேரத்தில் ஆசியாவின் மிகப்பெரும் தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் குறிக்கோள்.
இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், ஏற்கனவே தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும், ஜப்பான் நாட்டுக்கு சென்று ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார். குறைந்தபட்சம் ரூ.300 கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம். அந்த வகையில் முன்பு தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு மற்றும் இன்றைய தொழில் துறை அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பி ராஜா மற்றும் தொழில் துறை அலுவலர்களும், நன்றாக செயல்பட்டு பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ரூ. 1,891 கோடி முதலீட்டில் குளிர்சாதனக் கருவிகள் உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தானது. அதையொட்டி ஐ.பி நிறுவனம் ரூ.312 கோடி, டைசல் நிறுவனம் ரூ. 83 கோடி, குயுகொட்டா நிறுவனம் ரூ. 113.9 கோடி, மிச்சுபசா இந்தியா ரூ.155 கோடி, பாலிகோ ஸ்டோபில் ரூ. 180 கோடி, பாலிகோ சட்டோஸ்ஜி ரூ.200 கோடி, ஓம்ரான் ஹெல்த்கேர் ரூ. 128 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தகள் கையெழுத்தானது.
ஒட்டுமொத்தமாக ரூ.3, 233 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன்மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். இதுமட்டுமல்லாது, சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கும், தொழில் கேள்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளுடைய, முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும் சிங்கப்பூர், ஜாப்பானில் உள்ள நிறுவனங்கள் எதிர்காலத்திலும் தமிழகத்தில் தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதையொட்டு வருகின்றன 2024, ஜனவரி 10, 11 முதலீட்டார்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“