/tamil-ie/media/media_files/uploads/2020/05/image-90.jpg)
கொரோனா பெருந்த்தொற்று முடக்கநிலை காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மே 7ம் தேதி முதல் திறப்ப்பெதன தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பக்கு, பொது மக்களும், சமூகவியலாளர்களும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பின்னணியில் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு சின்னம் அணிந்து காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5 பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து முக்கமிட்டு கலைவதென்று திமுக தலைமயிலான மதச்சார்பற்ற கூட்டணி முடிவெடுத்தது.
அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினரும், அதன் தோழமை கட்சி உறுப்பினர்களும். பொது மக்களும் கருப்பு உடை அணிந்து டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களோடு எதிர்பை பதிவு செய்தார்.
— M.K.Stalin (@mkstalin) May 7, 2020
கனிமொழி எம். பி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்:
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..#குடியைக்கெடுக்கும்அதிமுக#குடிகெடுக்கும்_எடப்பாடிpic.twitter.com/dllyvca5pg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 7, 2020
கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகளை திறந்து #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கருப்புச் சின்னம் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினோம்...@mkstalin@tncpim@ThanthiTV@bbctamil@News18TamilNadu@news7tamil@sunnewstamil@vikatanpic.twitter.com/GTciB0YcK2
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 7, 2020
ஆசிரியர் கீ. வீரமணி:
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததோடு, மதுக்கடைகளைத் திறந்து மேலும் பரவ வாய்ப்பளிக்கும் அ.இ.அ.தி.மு.க.அரசைக் கண்டித்து இன்று காலை 10 மணிக்கு எமது இல்லத்தில் கருப்புக் கொடியேந்தி, கழகப் பொதுச் செயலாளர், பொருளாளர், சட்டத் துறைச் செயலாளர் ஆகியோருடன் முழக்கம் எழுப்பினோம். pic.twitter.com/KcQ2PDtjCu
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) May 7, 2020
அரசியல் செயல்பாட்டாளர் - ஜோதிமணி
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போராட்டத்தில் இன்று pic.twitter.com/zJjGVLgZrS
— Jothimani (@jothims) May 7, 2020
தமிழச்சி தங்கப்பாண்டியன் கருப்பு உடை அணிந்து முழக்கமிட்டார்.
தலைவர் @mkstalin அறிவுறுத்தலின் படி, TASMAC கடைகள் திறப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், எனது இல்லத்தின் முன்பு, திரு. @S_AravindRamesh MLA., மற்றும் கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சியினருடன் கருப்பு உடை அணிந்து முழக்கமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தோம்.#குடிகெடுக்கும்_எடப்பாடிpic.twitter.com/tHlKHRmYw5
— தமிழச்சி (@ThamizhachiTh) May 7, 2020
நாம் தமிழர் சீமான்:
மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க!https://t.co/KAl1zR1rWC@CMOTamilNadupic.twitter.com/NsN93uznfh
— சீமான் (@SeemanOfficial) May 6, 2020
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் :
மதுகடைகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்!
DYFI மாநில செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்பு #COVIDー19#CoronaLockdown#TASMAC#ModiGovt#TNGovtpic.twitter.com/TAYvnyQvo0
— CPIM Tamilnadu (@tncpim) May 7, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.