தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச்சு; ‘வெட்கக்கேடான செயல்’; ஸ்டாலின் - தலைவர்கள் கண்டனம்

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீசி தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீசி தாக்குதல் முயற்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
stalin pinarayi thiruma

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ராகேஷ் கிஷோர் என்ற 71 வயது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற எண் 1-ல் நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்தபோது, தனது ஸ்போர்ட்ஸ் காலணியைக் கழற்றி நீதிபதி கவாய் மீது வீசியது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  அவரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிடித்து, உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில், அவர் டெல்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர் என்றும் தெரியவந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசி தாக்குதல் நடத்த என்ன காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலை புணரமைப்பு தொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்தபோது, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்த கருத்துக்களால் அந்த வழக்கறிஞர் மனவருத்தத்தில் இருந்தது தெரியவந்து உள்ளது.

Advertisment
Advertisements

இந்த சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சலனப்படாமல், வழக்கறிஞர்களை தொடர்ந்து வழக்குகளை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். அந்நபர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும்போது, "சநாதன தர்மத்தின் அவமானத்தை இந்துஸ்தான் சகிக்காது" என்று முழக்கமிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உச்ச நீதிமன்றத்திற்குள்  தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி வெட்கக்கேடான செயல் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். மேலும், இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் அந்த நிறுவனத்தின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால், அது சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள வைக்காது. தாக்குதல் நடத்திய நபர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் படிநிலை மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நமது அமைப்புகளை மதிக்கும், பாதுகாக்கும், நமது நடத்தையில் முதிர்ச்சியைக் காட்டும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல். தாக்குதல் முயற்சிக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பெருந்தன்மையுடன் பதிலளித்தது அவரது நீதித்துறையின் பலத்தை காட்டுகிறது. நமது அமைப்புகளை மதிக்கும், பாதுகாக்கும் முதிர்ச்சியான நடத்தை உள்ள கலாசாரத்தை வளர்க்க வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்க முயன்றதற்கு கேரளா முதலமைச்சர் பினராயின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அச்சமூட்டும் சம்பவம் சங்க பரிவாரத்தால் பரப்பப்படும் வெறுப்பின் பிரதிபலிப்பாகும். இதை ஒரு தனிப்பட்ட செயலாக நிராகரிப்பது வளர்ந்து வரும் சகிப்பின்மை சூழலைப் புறக்கணிப்பதற்குச் சமம். இந்திய தலைமை நீதிபதியைக் கூட வகுப்புவாத வெறி குறிவைக்கத் துணியும் போது, ​​அது இந்தப் பிரிவினைவாத மற்றும் விஷ அரசியலின் கடுமையான ஆபத்தை அம்பலப்படுத்துகிறது, இதை தயக்கமின்றி எதிர்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

வி.சி.க தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் மீது காலணி வீசி அவமதித்த சனாதன வெறியர் வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வழக்கறிஞராகப் பணியாற்றும் அவரது தகுதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (யு.ஏ.பி.ஏ) சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய வேண்டும்.

காலணி வீசிய குற்றவாளி, சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று கூறியதாக அறிகிறோம். இந்த அத்தியாயத்திலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

புரட்சியாளர் அம்பேத்கரின் சித்தாந்தத்தை உள்வாங்கிய ஜனநாயக சக்தியான தலைமை நீதிபதி மீது இத்தகைய வெறுப்பைக் கொட்டுவது உண்மையில் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான செயலாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சம்பவம் முழு நீதித்துறையையும் அவமதித்துள்ளது. நாடு முழுவதும் சனாதன சக்திகளின் அத்துமீறல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இது மற்றொரு சான்று.

இந்தச் சூழ்நிலையில், சனாதனத்தை வேரோடு பிடுங்குவதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவது காலத்தின் தேவை.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Cm Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: