Advertisment

தஞ்சை படுகொலை: ஆசிரியை குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்; பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

தஞ்சாவூர் அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mk stalin releaf to teacher

ஆசிரியை கொலை நடந்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த பிறகே பள்ளி திறக்கப்படும் என்று கூறினார்.

தஞ்சாவூர் அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Advertisment

மேலும், ஆசிரியை கொலை நடந்த மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த பிறகே பள்ளி திறக்கப்படும் என்று கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். 

அதே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மதன்குமார் (30). இவர் ரமணியை ஒரு தலையாக காதலித்து வந்தத நிலையில், இன்று (நவம்பர் 20) மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மதன்குமார், வகுப்பறையில் படம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், கத்தியால் குத்திய மதன்குமாரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

கத்தியால் குத்தப்பட்டத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெளத்தில் உயிருக்கு போராடிகொண்டிருந்த  ஆசிரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.

பட்டப்பகலில் அரசுப் பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆசிரியை ரமணியை கொலை செய்த மதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தஞ்சையில் ஆசிரியை ரமணி படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்  ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியை படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஆசிரியை ரமணி உடலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.


இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மல்லிப்பட்டினன் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வாரம் முழுவதும் (நவம்பர் 24 வரை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளித்த பிறகு, பள்ளி திறக்கப்படும் என்று கூறினார். 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சையில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் மிருகத்தனமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆசிரியையின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) த/பெ.முத்து அவர்கள் இன்று (20.11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன்.

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.

கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கொலை நிகழ்ந்த மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Mk Stalin Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment