ஜி20 மாநாட்டை முன்னிட்டு, நடைபெறும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்தியக் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, ‘பாரத குடியரசுத் தலைவர்’ திரௌபதி முர்மு என அச்சிடப்பட்டுள்ளது குறித்து மு.க. ஸ்டாலின் பா.ஜ.க-வையும் மத்திய அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு தொடங்கும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்று ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.
जन गण मन अधिनायक जय हे, भारत भाग्य विधाता
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 5, 2023
जय हो 🇮🇳#PresidentOfBharat pic.twitter.com/C4RmR0uGGS
இதனால், ஜி20 உச்சி மாநாடு தொடங்கும் செப்டம்பர் 9-ம் தேதி இரவு 8 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்க உள்ளார். இந்த விருந்துக்கான அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் (President of India) என்று வழக்கமாகக் குறிப்பிட்டு வந்த நிலையில், பாரத குடியரசுத் தலைவர் (President of Bharat) திரௌபதி முர்மு என அச்சிடப்பட்டிருப்பது தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' (INDIA) என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது” கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், “அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்” என்று மு.க. ஸ்டாலின் பா.ஜ.க-வை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனிடையே, இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றம் செய்யும் சட்ட மசோதா வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கும் 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக, இதுபோன்ற அழைப்பிதழ்களின் தலைப்பாக ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது இந்தியா என்பதற்குப் பதில் பாரதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.