Advertisment

பா.ஜ.க அரசுக்கு எதிராக எந்த கருத்து சொன்னாலும் மிரட்டுகிறார்கள்; ஸ்டாலின் பேச்சு

பூவிருந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க அரசுக்கு எதிராக எந்த கருத்து சொன்னாலும் மிராட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பா.ஜ.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MK Stalin (19)

பா.ஜ.க அரசுக்கு எதிராக எந்த கருத்து சொன்னாலும் மிராட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள் - ஸ்டாலின் பேச்சு

பூவிருந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க அரசுக்கு எதிராக எந்த கருத்து சொன்னாலும் மிராட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பா.ஜ.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது என விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

சென்னையை அடுத்த பூவிருந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமியின் இல்ல திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். 

பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி மகள் தாரணிக்கும் முருகன் மஞ்சுளா தம்பதி பரகத் கௌசிக்கிற்கு திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இன்றைக்கு நாம் எல்லாம் பூந்தமல்லி, பூந்தமல்லி என்று அழைக்கிறோம். வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பூந்தன்மல்லி என்றுதான் அழைத்திருக்கிறோம். இப்போது பூந்தமல்லி என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். பூந்தன் என்றால், அதில் தன் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் குளிர்ச்சி, குளிர்ச்சி மயமான மலர்களுடைய பெயர்கள் மட்டுமல்ல, கொள்கைப் பிடிப்புள்ள உடன்பிறப்புகளும் பிறந்திருக்கக்கூடிய பகுதியாகத்தான் பூந்தமல்லி இருந்திருக்கிறது என்பதை எண்ணிப்பாக்கிறபோது, நான் உங்களோடு மகிழ்ச்சி அடைகிறேன். 

1976 ஆம் ஆண்டு நாம் ஒரு நெருக்கடி நிலையை சந்தித்தோம். நாட்டிற்கு நெருக்கடி வந்துச்சு, எமர்ஜென்ஸி, அந்த நேரத்தில் நாம் எமர்ஜென்ஸியை எதிர்த்தோம், அப்போது, கலைஞர் கருணாநிதிக்கு டெல்லியில் இருந்து தூது வந்தார்கள், அம்மையார் இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கிற எமர்ஜென்ஸி நிலையை எதிர்க்கக் கூடாது, ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எதிர்க்கக் கூடாது, அப்படி மீறி எதிர்த்தால் உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும், நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் இன்னும் சில ஆண்டு காலம் உங்கள் ஆட்சியில் இருக்கும் என்று சொன்னார்கள். அப்போது நாங்கள் பக்கத்தில் இருக்கிறோம். அப்போது அவர்களிடத்தில் கலைஞர் கருணாநிதி சொன்னார்கள், எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நாட்டிற்கு ஏற்பட்டிருக்ககூடிய நெருக்கடி நிலையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். நாங்கள் ஜனநாயகத்தைத் தான் நம்பி இருக்கிறோம். ஆட்சி அல்ல, எங்கள் உயிரே போனாலும் நாங்கள் இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்று கலைஞர் கருணாநிதி வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்கள் இது வரலாறு. சொல்லி அனுப்பிவிட்டு அடுத்த நாள் சென்னை கடற்கரையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி, கலைஞர் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்திராகாந்தி எமெர்ஜென்ஸியை ரத்து செய்ய வேண்டும், மிசா சட்டத்தில் சிறையில் வாடும் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். தீர்மானம் போட்டு அங்கே கூடியிருந்த மக்களை எல்லாம் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்கள். தீர்மானம் நிறைவேற்றிய அடுத்த வினாடி தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருந்த தி.மு.க ஆட்சி கலைக்கப்படுகிறது.

கலைக்கப்பட்டதற்கு பிறகு, பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நடந்த கொடுமை எல்லாம் உங்களுக்கு தெரியும். அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. எதற்காக சொல்கிறேன் என்றால் அந்த சூழ்நிலையில், கிருஷ்ணசாமியின் தந்தை ஆதி சதாசிவம் துணிச்சலோடு, பலபே வேட்டி கட்டுவதற்கே கட்ட பயந்தார்கள். அப்படியே கட்டினாலும் கருப்பு சிவப்பு கரை வேட்டி கட்ட பயந்தார்கள். அந்த நேரத்தில், ஆதி சிதாசிவம் கருப்பு சிவப்பு துண்டு போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு கோஷமிட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவரை 10 வயது சிறுவனாக கிருஷ்ணசாமி பார்க்க சென்றபோது
அவர் சிறையில் அனுபவித்த கொடுமைகள் சொல்லக் கேட்டு உணர்ச்சி பெற்று தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய நிலமைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையிலேதான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. 

எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய ஆட்சி, பா.ஜ.க ஆட்சி, தனக்கு எதிராக யார் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அவர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது அதற்காக வருமானவரித் துறையை, அமலாக்கத்துறையை, இன்னும் சொல்லனுமனா, இப்போது டெலிபோன் ஒட்டுக் கேட்பு முறையைக் கையாண்டிருக்கிறார்கள். ஹேக் செய்ய முயற்சியைக் கையாண்டிருக்கிறார்கள். ஆப்பிள் என்ற பெரிய நிறுவனம், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே எச்சரித்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கெல்லாம் அவர்களே சுட்டிக் காட்டியிருக்கிறார்கள், கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கிறது என்று எழுதி இருக்கிறார்கள். இப்படி ஒரு செய்தி வந்த உடனே ஒன்றியத்தில் இருக்கக்கூடிய, ஒரு அமைச்சர், என்ன பதில் சொல்லுகிறார்? இது குறித்து விசாரிக்க நடவடிகை எடுக்கப்படும். விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எறு அறிவிப்பு வெளியிடுகிறார்கள். இது என்ன கேலிக் கூத்து, செய்வதை செய்துவிட்டு, இன்றைக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒரு செய்தியை வெளியிடுகிறார் என்று சொன்னால், அந்த அளவுக்கு நாட்டிலே இன்றைக்கு ஒரு கொடுமை சந்திக்ககூடிய நிலையிலே நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அவர்களைப் பொறுத்தவரை தோல்வி பயம் வந்துவிட்டது. இங்கே கூட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கக் கூடியவர்கள்தான் உட்கார்ந்து இருக்கிறோம். 

இந்தியா கூட்டணி இன்றைக்கு அவர்கள் (பா.ஜ.க) எதிர்பாரத வகையிலே அமைந்து மக்களிடத்திலே போய் நம்முடைய பிரச்னைகளை எல்லாம், மோடி ஆட்சியினுடைய அக்கிரமங்களை, அநியாயங்களை, அவல நிலைமைகளை எல்லாம் இன்றைக்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். விரைவேல் ஐந்து மாநில தேர்தல்கள் வர இருக்கிறது. நமக்கு கிடைக்கக்கூடிய செய்திகள் எல்லாம் ஐந்து மாநிலத்திலும் பா.ஜ.க தோல்வியைத் தழுவப் போகிறது என்ற செய்திதான் நமக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால், அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அந்த பயத்தின் காரணமாகத்தான், இன்றைக்கு இது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முறியடித்து, நாட்டிற்கு நல்ல விமோசனத்தை உருவாக்கித் தருவதற்கு இந்தியாவை காப்பாற்றுவதற்கு இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வரக்கூடிய நாடமாளுமன்றத் தேர்தலில் மிக சிறப்பான வெற்றியைத் தேடித் தர அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று பேசினார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment