ஜெகன்மோகன் ரெட்டியின் அன்பான அழைப்பு.. மகனுடன் விஜயவாடா புறப்பட்டார் மு.க ஸ்டாலின்!

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

By: Updated: May 30, 2019, 12:01:43 PM

mk stalin attending jegan mohan reddy swearing ceremony : ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினுடன் விஜயவாடா சென்றுள்ளார்.

176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆந்திராவின் விஜயவாடா அருகே உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் இன்று முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை வருகிற ஜூன் 7ல் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்று மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். விழாவில் பங்கேற்க ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுடன் விஜயவாடா சென்றுள்ளார். விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

மேலும், அங்கு ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin attending jegan mohan reddy swearing ceremony today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X