/tamil-ie/media/media_files/uploads/2022/10/mk-stalin-pti040522.jpg)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திமுக பொதுக்குழுவில் தலைவர் பதிவியை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் பேசியதாவது: ” ஒரு பக்கம் திமுகவின் தலைவர் மறுபக்கம் முதல்வர் என்ற பொறுப்பு. மத்தலத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பதுபோல் இருக்கிறது எனது நிலைமை. மூத்த அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிளின் செயல் சிறுமைப்படுத்துவதுபோல் இருக்கக்கூடாது. புதிய பிரச்சனை வந்துவிடுமோ என்ற கவலை தூங்க விடாமல் செய்கிறது.
எனது உடலை பார்த்தால் உங்களுக்கே தெரியும். பொது நன்மைக்காக இதை சொல்லவில்லை உங்களுடைய நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். இங்கே தனியான இடம் என்று ஒன்றில்லை. செல்போன் மூன்றாவது கண்ணாகிவிட்டது. நீங்கள் எல்லோரும் கண்காணிக்கப்படுகிறீர்கள். சில நிர்வாகிகளின் செயலால் கழம் அவமானத்தை சந்தித்துள்ளது.
முடிந்த வரை கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் பயன்படுத்தக்கூடய சொற்கள் மிகவும் முக்கியமானவை, பொதுமேடையில் மட்டுமல்ல தனிநபரிடம் பேசும்போதும் பார்த்து பேசுங்கள். நீங்கள் சொல்வதை வெட்டியும் ஒட்டியும் பரப்பிவிடுவார்கள். இதற்கு பதில் சொல்வதற்கே நேரம் சரியாகிவிடும். இப்படி இருக்கையில் எப்படி மக்கள் பணி செய்வது. நம்மை திசை திருப்ப எதிரிகள் முயற்சி செய்வார்கள்.
நாம் முன்னெடுக்கும் மக்கள் நல திட்டங்களில் குறை கண்டுபிடிக்காதவர்கள், நம்மை கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்வார்கள், அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. உதயநிதி முன்னெடுத்து வரும் இளைய தலைமுறை பாசறை நிகழ்வுகளை அனைவரும் பாராட்டுகின்றனர். நமக்கு கூட்டம் சேர்க்க ஆட்கள் தேவையில்லை. கொள்கைகளில் வலுவாக இருக்கும் நபர்கள்தான் தேவை. திடாவிட மாடல் என்ற சொல் இந்தியாவையே நம் மேல் கவனம் ஈக்க செய்துள்ளது. ” என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.