ஸ்டாலினை புகழ்ந்து திமுக மேடையில் கவிஞர் வைரமுத்து... ட்விட்டரில் கிளம்பிய விமர்சனம்!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நேற்று பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைப்பெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நேற்று பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைப்பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டாலினை புகழ்ந்து திமுக மேடையில் கவிஞர் வைரமுத்து... ட்விட்டரில் கிளம்பிய விமர்சனம்!

mk stalin birthday dmk special program vairamuthu : திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக திமுக சார்ப்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு தலைமை உரை ஆற்றினார். இது ட்விட்டரில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் ‘தளபதி - தலைவர் - முதல்வர்’ என்கிற தலைப்பில் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நேற்று பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தி.மு.கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., இயக்குநர் கரு.பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் உணர்வு உரை ஆற்றினார்.

Advertisment
Advertisements

பிரபல பாடகி ஒருவர் கொடுத்த மிகப்பெரிய குற்றச்சாட்டினால் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து, திமுக மேடையில் உரை ஆற்றியது கலவையான விமர்சனக்களை எழுப்பியுள்ளது. சிலர், ஸ்டாலினிடம் கேள்வியும் எழுப்பியுள்ளனர். இதுக்குறித்து பகிரப்படும் சில ட்வீட்கள் உங்கள் பார்வைக்கு..

நேற்று இரவு முதல், பலரும் இதுத்தொடர்பான கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: