/tamil-ie/media/media_files/uploads/2019/02/mk-stalin-12.jpg)
TN local body election News Live Updates
MK Stalin Skips Birthday Celebration: மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தனது பிறந்த நாளன்று தொண்டர்களின் பார்வையில் படாமல் ‘எஸ்கேப்’ ஆனார். கலைஞர் மரணத்தை தொடர்ந்து தனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாட விரும்பாததே இதற்கு காரணம்! தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஸ்டாலினை சந்திக்க ஆவலாக இருந்த நிர்வாகிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
மார்ச் 1-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்! ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை இளைஞர் எழுச்சி தினமாக திமுக.வினர் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பிட்ட நாளில் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் கட்சி முன்னணியினரை சந்தித்து வாழ்த்து பெறுவதும் வழக்கம்.
ஆனால் கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருக்கிறார். பிப்ரவரி 27-ம் தேதியே வெளியூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது மருமகன் சபரீசன் இல்லத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடாத காரணத்தால், வெளியூர் நிர்வாகிகள் சென்னை வருவதை தவிர்த்துவிட்டனர். எம்.பி. சீட்டுக்கு விண்ணப்பிக்க சென்னை வந்த நிர்வாகிகள், இந்த தருணத்தில் ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு நழுவிவிட்டதே என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடாவிட்டாலும், திமுக.வினர் இன்று தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்தில் இலவச சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.