/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-61.jpg)
முக ஸ்டாலின் ஆஜர்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தமிழ அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக முதன்முதலாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
முக ஸ்டாலின் ஆஜர்:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து எம்.பி. எம்.எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அக்டோபர் 24 ந்தேதி காலை 9.30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி ஸ்டாலின் இன்று காலை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானர்.
@mkstalin at Court appearing on a defamation case.. pic.twitter.com/FgVxCbKa1B
— Pramod Madhav (@madhavpramod1) 24 October 2018
முன்னதாக நீதிமன்றத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் வில்சன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை வரும் அக்.31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.